மல்லிகை 42 வது ஆண்டு மலர் வெளியீடு
இன்று மாலை(17.02.2007) 5.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் மல்லிகையின் 42வது ஆண்டு மலரின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இலங்கையின் இளைய படைப்பாளிகளில் ஒருவரான இளைய அப்துல்லாஹ்யின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்கள் வரவேற்புரையை நிகழ்த்தினார்.பேச்சாளர்களாக தினக்குரல் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம், இளையதம்பி தயானந்தா, ஸ்ரீபிரசாந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். மல்லிகையின் 42 வது ஆண்டு மலரின் முதலாவது பிரதியினை புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேமன்கவி நன்றியுரை நிகழ்த்தினார்.
இம்முறை மல்லிகை ஆண்டு மலரில் சிறப்புப் பகுதியாக "கணணி இணையம், தமிழ்" எனும் தலைப்பில் கணணியிலும் இணையத்திலும் தமிழின் உபயோகம் சம்பந்தமான கட்டுரைகளும் இடம் பெற்று இருப்பது சிறப்பம்சமாகும். மல்லிகையுடன் தொடர்புக் கொள்ள விரும்புவோர் பின்வரும் மின்னஞ்சலுக்கு எந்தவொரு எழுத்துருவிலும் படைப்புக்கள் அனுப்பலாம். mallikaijeeva@yahoo.comଧ